நோர்வூட் பொலிஸ் பிரிவில் 12 பேருக்கு கொரோனா வங்கி, எண்ணெய் நிரப்பு நிலையம், பார் அகியவற்றிக்கு பூட்டு……!

0
267

கொரோனா தொற்று காரணமாக நோர்வூட் நகரில் அமைந்துள்ள எண்ணெய் நிரப்பு நிலையம், வங்கி, பார் ஆகியன மூடப்பட்டுள்ளன.
மஸ்கெலியா பொது வைத்திய சுகாதார அதிகார பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் பிரிவில் நோர்வூட் நகரில் இன்று (03) திகதி வெளியான பி.சி,ஆர் அறிக்கையில் 12 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து நோர்வூட் நகரில் உள்ள எண்ணெய் நிரப்பு நிலையம், சமூர்த்தி வங்கி, பார் ஆகியன பூட்டப்பட்டுள்ளதாக மஸ்கெலயா பொது சுகாதார வைத்திய அதிகாரி துறைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்.

இதே வேனை நோர்வூட் ஜனபத கொலனி மரண வீடு ஒன்றில் கலந்து கொண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேருக்கு கோரோனா தொற்று பரவியிருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சாமிமலை பகுதியில் 04 பேருக்கும் மஸ்கெலியா பகுதியில் 04 பேருக்குமாக மொத்தம் 20 பேருக்கு மேலும் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் குறித்த தொற்றாளர்கள் அனைவரும் உரிய சிகச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த தொற்றாளர்களுடன் நெருக்கமான உறவினை பேணியவர்கள் தனிப்படுத்தப்படவுள்ளதாகவும் சுகாதார அதிகாரி சந்திரராஜன் மேலும் தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here