நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இரண்டு மாடுகாளை கொண்டு சென்ற மூன்று நபர்களை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
நோர்வூட் மாநெலு பகுதியில் இன்று (04) அதிகாலை 5.50 மணி அளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கு இடமான முறையில் லொறி ஒன்று வருவதனை கண்டு சோதனை செய்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சட்டவிரோதமான மாடுகள் மஸ்கெலியா சாமிமலை பகுதியிலிருந்து பொகவந்தலா பகுதிக்கு கொண்டு செல்வதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
குறித்த பசு மாட்டினையும் கன்றினையும் வளர்ப்பதற்காவே கொண்டு செல்வதாக வாக்கு மூலம் அளித்துள்ள போதிலும் இறைச்சிக்காக கொண்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த இரண்டு மாடுகள் மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியன பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின் நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே.சுந்தரலிங்கம்