85 பயணிகளுடன் பயணித்த பிலிப்பைன்ஸ் விமானப் படைக்கு சொந்தமான C130 ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானம் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு தென் பிலிப்பைன்ஸில் ஜோஜோ தீவில் தரையிறங்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தீப்பற்றிய விமானத்திலிருந்து 40 பயணிகளை மீட்க முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென் பிலிப்பைன்ஸில் இராணுவ விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது, 3 விமானிகள், 5 பணிக்குழாமினர் அடங்கலாக 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுக்கான முதலுதவி மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.