இன்று யூரோ தொடரின் முதல் அரை இறுதிச் சுற்று. இத்தாலி மற்றும் ஸ்பெயின்.

0
210

யூரோ கால்பந்து தொடரின் அரை இறுதிச் சுற்றில் இத்தாலி – ஸ்பெயின் அணிகள் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லண்டனில் உள்ள வெம்பிலி மைதானத்தில் மோதுகின்றன.

ஸ்பெயின் அணி லீக் சுற்றில் சுவீடன், போலந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த நிலையில் சுலோவேக்கியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இதன் பின்னர் நாக் அவுட் சுற்றில் குரோஷியாவுக்கு எதிராக 5 கோல்களை அடித்து அபார வெற்றி கண்டது. தொடர்ந்து சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான கால் இறுதிச் சுற்றில் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்றிருந்தது.

அதேவேளையில் இத்தாலி அணியானது லீக் சுற்றில் எதிரணியிடம் இருந்து ஒரு கோல் கூட வாங்காமல் 3 ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தி இருந்தது. நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரியாவையும் கால் இறுதிச் சுற்றில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெல்ஜியம் அணியையும் வீழ்த்தியிருந்தது இத்தாலி அணி. கடைசியாக விளையாடிய 32 ஆட்டங்களிலும் வீழ்த்த முடியாத அணியாக இத்தாலி வலம் வருகிறது. இதில் இத்தாலி அணி 27 வெற்றி, 5 டிராக்களை பதிவு செய்துள்ளது.

இத்தாலியும், ஸ்பெயினும் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ஸ்பெயின் 12 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. இத்தாலி 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 13 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தன. கடைசியாக இரு அணிகளும் கடந்த 2017-ம் ஆண்டு மோதின. இதில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here