சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக மலையக வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வரும் பலர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
சுகாதார துறையினரை சார்ந்த ஒரு சில பிரிவினருக்கு மாத்திரம் அரசாங்கம் சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 14 கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு தழுவிய ரீதியில் நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கம் உட்பட 14 தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மலையக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகாக வரும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு நாளாந்தம் சுமார் ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்கள் உட்பட பலர் பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக வருகை தருகின்றனர். இன்று இந்த போராட்டம் காரணமாக பல தூர பிரதேசங்களில் இருந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வருகை தந்தவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது பல அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்தனர்.
ஆதிகமாணவர்களின் விஞ்ஞான கூட பரிசோதனை அதிக பணம் செலுத்தி தனியார் விஞ்ஞானக்கூடங்களில் செய்து கொள்ள வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளன இதனால் பலர் பல்வேறு நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். வைத்தியசாலையில் உள்ள மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளதனால் வைத்திய ஆலோசனையின் படி மருந்துகளை பெற முடியாது பலர் தடுமாறியதும் காணக்கூடியதாக இருந்தன.
அதிக பொருளாதார சுமையுடன் வாழும் பலர் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை பெற முடியாத நிலைமையும் காணப்படுகின்றனர். அத்தோடு பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் பி.சி.ஆர் சோதனைகளும் பிற்போடப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதோடு இறந்தவர்களின் சடலங்கள் எடுக்கவும் முடியாத நிலை தோன்றியுள்ளன.
குறித்த நடவடிக்கைகள் காணமாக மலையகப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவறு அதிகரிக்க கூடும் என பொது மக்கள் இச்சம் வெளியிடுகின்றனர்.
கே.சுந்தரலிங்கம்