அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 10,155 பாடசாலைகளைச் சேர்ந்த அனைத்து கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு இவ்வாறு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.