கருத்து முரண்பாட்டால் தமையனின் காதை கடித்து துப்பிய தம்பி-

0
221
கருத்து முரண்பாட்டால் தமையனின் காதை கடித்து துப்பிய தம்பி. மண்டையை பதம்பார்த்த அண்ணன். தென்மராட்சி-நாவற்குழிப் பகுதியில் அண்ணன்-தம்பி இடையே இடம்பெற்ற மோதலில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

நாவற்குழிப் பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் அண்ணனின் காதை தம்பியார் கடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அண்ணன் அருகில் இருந்த தராசினை தூக்கி தம்பியின் தலையைப் பதம் பார்த்திருந்தார்.

தலை மற்றும் காதுப் பகுதியில் படுகாயமடைந்த 32 மற்றும் 37 வயதான சகோதரர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here