தலவாக்கலை கிலோனாமோரா தோட்டத்தில் 97 சதவீதம் இன்று தடுப்பூ போடப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சௌந்தரராகவன் தெரிவிப்பு.

0
194

மலையக பகுதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (09) திகதி பல பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டன. இதில் கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குப்பட்ட கூம்மூட் கிராம சேவகர் பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் கிலோனாமோரா தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 97 சதவீமானவர்கள் இன்றைய தினம் சைனோபாம் முதல் தடுப்பூசியினை போட்டுக்கொண்டதாக கொட்டகலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் சௌந்தரராகவன் தெரிவித்தார்.

குறித்த தோட்டத்தில் 60 வயத்திற்கு மேற்பட்ட சுமார் 116 பேர் வசித்து வருகின்றனர் இதில் 113 பேர் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாகவும் இதில் இந்த தோட்ட மக்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் ஆர்மாகவும் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் முதல்டோஸ் ஸ்டோனிகிளப் கிளினிக்கில் சுமார் 522 பேருக்கும் தலவாக்கலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் 612 பேருக்குமாக மொத்தம் 1134 பேருக்கு தடுப்பூசிகள் இன்று (09) திகதி பெற்றுக்கொடுக்க நடவடிக்கைள் மேற்கொண்டிருந்தாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.

 

கே.சுந்தரலிங்கம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here