டிக்கோயா போடைஸ் பகுதியில் 12 வது தடைவையாகவும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் இதனால் சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட பலர் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
போடைஸ் பகுதிக்கு நேற்று (09) மாலை முதல் கடும் காற்றுடன் கடும் மழையும் பெய்துள்ளன.இதனால் இப் பகுதியில் உள்ள போடைஸ் ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக இந்த பகுதியில் உள்ள சுமார் 42 வீடுகளுக்கு வெள்ள புகுந்துள்ளன.
இதனால் கை குழந்தைகளுடன் உள்ள தாய்மார்கள் மற்றும் முதியர்வர்கள் வெளியேற இரவு நேரம் என்பதால் வீடுகளில் இருந்து வெளியேற முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆற்றின் வெள்ளம் பல பிரதேச பெருக்கெடுத்ததன் காரணமாக இந்த பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்கள் சுய தொழில் நிலையங்கள் காளான் உற்பத்தி நிலையங்கள் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. கடும் காற்று காரணமாக டிக்கோயா ஹட்டன் போடைஸ் உள்ளிட்ட பல பிரதேசங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதே நேரம் குறித்த பிரதேசத்தில் கடந்த ஏப்ரேல் மாதம் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் பாதிக்கப்பட்ட போது இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த அரசியல் தலைவர் ஒருவர் ஆற்றினை அகலப்படுத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்த போதிலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் சிறிய அளவில் மழை பெய்தாலும் பல வீடுகளுக்கு வெள்ள புகுவதாகவும் இதனால் இப்பிரதேச மக்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து பொருப்பு வாய்ந்தவர்கள் கவனமெடுத்து உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்