கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெனில்வேர்த் இலக்கம் நான்கு பிரிவிலுள்ள வீடமைப்பு திட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் வீடொன்றின் ஒரு பகுதி சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் இந்தச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால் வீட்டின் ஒரு பகுதி சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர்
கனகராஜ் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் தேசிய சங்கம் என்பனவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது தொடர்ந்து அவர் இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அதேவேளை மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கெனில்வத்த இலக்கம் 4 தோட்டப் பிரிவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.