வணக்கஸ்த்தலங்களை திறக்க, திருமண நிகழ்வுகள் நடத்த அனுமதி

0
204

இன்று முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் வைத்தியர் அசேல குணவர்தன சுற்று நிரூபமொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

மூடப்பட்டிருந்த வணக்கஸ்த்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபத்தில் 25 சதவீத எண்ணிக்கையிலானோருடன் அல்லது அதிகபட்சமாக 150 பேருடன் திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், செயலமர்வுகளை 50 பேருடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here