இரத்தினபுரி மாவட்ட, வெல்லாந்துர தோட்ட நிர்வாகம் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொந்தமான ஆட்டு கொட்டகைகளை வலுக்கட்டாயமாக உடைத்து வாழை மரங்களையும் வெட்டியுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கது என்பதுடன், தோட்ட நிர்வாகத்தினர் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் முடியாதெனவும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பிலேயே மேலதிக வருமானத்தை ஈட்டி வருவதுடன் இதன்மூலம் தேசிய பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிக்கின்றனர்.
ஒரு தொழிற்சங்கமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இரத்தினபுரி மாவட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளை கடுமையாக கண்டிப்பதுடன், எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள் நிர்வாகத்தின் இந்த அடாவடி போக்குக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் செந்தில் தொண்டமான் அவரது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.