கொட்டியாகலை கீழ்பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ராதாகிருஸ்ணன் உதவிக்கரம்.

0
172

அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுத்த போதிலும் அதனை வாங்கிய தொழிலாளர்கள் இல்லை கம்பனிகள் தோட்டத்தொழிலாளர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து தொழிலாளர் பறிக்கும் கொழுந்தின் அளவினை கூட்டி ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற முடியாது செய்துள்ளதாக மலையக மக்கள் முன்னணயின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுருசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
பொகவந்தலா கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட 300 குடும்பங்களுக்கு அரசி மா,பருப்பு கோதுமை மா பால்மா உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொகவந்தலா கொட்டியாகலை கீழ் பிரிவில் கடந்த 01 முதலாம் திகதி தோட்ட நிர்வாகம்  தொழிலாளர்களை ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த தோட்ட மக்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கடந்த முதலாம் திகதி தொடக்கம் உண்ணாவிரத போராட்டத்தினையும் ஆரம்பி;த்தனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக காணப்படுவதனால் இப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டன. இதனால் உண்ணாவிரத போராட்டமும் தற்காலிகமாக கைவிடப்பட்டன.இதனை தொடர்ந்து இந்த பிரதேசத்தில் மேற்கொண்ட 200 பிசிஆர் பரிசோதனையில் சுமார் 49 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் இதனால் தனிமைப்படுத்தப்பட்ட இந்த பிரதேசம் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து போராட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் காரணமாகவும் இவர்களுக்கு எந்த வித நிவாரணமும் கிடைக்காததன் காரணமாக இந்த பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர் இதனை கருத்தில் கொண்டே .இவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க பாராளுடன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸணன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் .இன்று இந்த மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவு பெறும் நிலையில் கூட இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்வில்லை.

இவர்கள் மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன இது தொடர்பாக நான் மாவட்ட செயலாயரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு காசு இன்னமும் வரவிலலை என்றார் இவ்வாறான ஒரு நிலை தான் காணப்படுகின்றன இந்த மக்கள் மிக விரையில் இந்த துன்பங்களை கடந்த வெளிவர வேண்டும் என்பதே எனது அவா என தெரிவித்த அவர் தற்போது தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இது குறித்த அந்த அமைப்பு கம்பனி அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேசி ஒரு சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு ஊடகவியலாளர் எழுப்பிய கேன்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

எதிர்வரும் வருடத்தில் கட்டாயம் மாகாணசபை தேர்தலோ அல்லது உள்ளுராட்சி தேர்தலோ வரும் அதில் மலையக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்தே போட்டியிடும் என தெரிவித்தார். அவர் தற்போது பசில் ராஜபக்ஸ அவர்களின் வருகையில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. அந்த கட்சி வேண்டுமானால் புத்துயிர் பெரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பொது சுகாதார பரிசோதகர்,மற்றும் முக்கயஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 கே.சுந்தரலிங்கம் 

நீலமேகம் பிரசாந்த்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here