நுவரெலியா பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா நாவலர் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.
நானுஓயா பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர்கள்,தோட்டப்பகுதிகளின் கள உத்தியோகஸ்தர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இங்கு முதற்கட்ட ஊசிகள் வழங்கப்பட்டதுடன்,
இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள திகதி அறிவிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டி,சந்ரு