நுவரெலியா மாவட்டத்தில் பொது சுகாதார பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நிகழ்வுகள் இன்றைய தினமும் பல பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இடம்பெற்றன.
இதற்கமைய லிந்துலை அண்மையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட லிந்துலை தேயிலை ஆராச்சி நிலையத்தில் பணிபுரியும் உத்தியோகஸ்த்தர்கள் ஊழியர்கள் உட்பட சுமார் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி சைனாபார்ம் முதல் டோஸ் இன்று (14) ம் திகதி பெற்றுக்கொடுக்கப்பட்டதாக லிந்துலை பொது வைத்திய சுகாதார அதிகாரி ஆறுமுகன் ஜெயராஜன் தெரிவித்தார்.
லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரை கொரோனா தொற்று பரவல் காரணமாக 10 மரணங்கள் நிகழ்ந்துள்ளமையினால் தொற்றுப்பரவல் அவதானம் காணப்படும் பிரதேசங்கள் இனங்காணப்பட்ட இந்த தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் சி.டி. தொழிற்சாலையில் கடமை புரியும் சுமார் 300 பேருக்கு இன்று சைனோபார்ம் முதல் டோஸ் பெற்றுக்கொடுக்கப்பட்டதென அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை குறித்த பொது சுகாதார பிரிவில் இன்றைய தினம் ஆசிரியர்கள் ஆதிபர்கள் உட்பட கல்வி சார் ஊழியார்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்