கைவிரல் நகத்தில் பிறை போல் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

0
202

நம் உடலில் இருக்கும் சில பிரச்னைகளை கைவிரல் நகத்தின் மூலமே அறிந்து கொள்ளலாம். உங்கள் விரல் நகத்தில் பிறை போல் இருந்தால் அது உடலில் இருக்கும் பிரச்னைகளையே சுட்டிக்காட்டும்.

கருப்பு நிற பிறை: நகத்தில் கருப்புநிற பிறை வருவது அசாதாரண மற்றும் ஆபத்தான அறிகுறி. இது உடலில் இரும்பு நச்சு இருப்பதன் அறிகுறி.

பிங்க் நிற பிறை: பிங் அல்லது சிவப்புநிற பிறை உடல் செயல்பாடு குறைவாக இருப்பதையும், நுரையீரல் பிரச்னையையும் காட்டுகிறது.

ஊதா நிற பிறை: இது மோசமான இரத்த காற்றோட்டம் மற்றும் உறுப்புக, திசுக்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காததைக் குறிக்கிறது. இவர்களுக்கு அடிக்கடி தலைவலி, தலைசுற்றல் வரும்.

வெள்ளை பிறை: இது ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கும்.

சாம்பல் நிற பிறை: இது களைப்பு, செரிமானக் கோளாற், ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிக்கும்.

சரி இனி எந்த, எந்த விரல்களில் பிறை இருந்தால் என்ன அர்த்தம் எனப் பார்க்கலாம்.

சின்னவிரல்: இது சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் இதய செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு பிறை பெரிதாக இருந்தால் பிபி இருக்கலாம்.

மோதிரவிரல்: இது இனப்பெருக்கம் மற்றும் நிணநீர் அமைப்பு செயல்பாட்டுடன் தொடர்புடையது. மோதிரவிரலில் பிறையானது லேசாக தெரிந்தால் செரிமானப் பிரச்னையைக் குறிக்கும்.

நடுவிரல்: இதில் பிறை தென்பட்டால் வாஸ்குலர் மற்றும், உயர் பி.பியைக் குறிக்கும்.

ஆள்காட்டிவிரல்: பெருங்குடல், கணையத்தின் முறையற்ற செயல்பாடு அல்லது நாள்பட்ட இ.என்.டி நோய்கள் இருந்தால் ஆள்காட்டி விரலில் உள்ள பிறை தென்படாது. அல்லது மிக சிறியதாக இருக்கும்.

பெருவிரல்: இது நுரையீரல், மண்ணீரல் வேலையை பிரதிபலிக்கும். புகை பிடிப்பவர்களுக்கு இது சின்னதாகவோ அல்லது தமணி பிபி அதிகமாக இருக்கும்போது பெரிதாகவோ இருக்கும்.

பிறை பெரிதாக இருந்தால் அதாவது விரல் நகத்தின் மூன்றில் ஒருபகுதியை ஆக்கிரமிக்கும். இது இதய அமைப்பு, இதயத்துடிப்பு சீர்குலைவு, குறைந்த ரத்த அழுத்தத்தைக் குறிக்கும். சிறிய பிறை குறைந்த ரத்த அழுத்ததை குறிக்கும். பிறை உங்கள் நகத்தில் தெரியாவிட்டாலும் அதில் அச்சப்பட எதுவும் இல்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here