டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்த யுவதி இதுவரை மீட்கப்படவில்லை – தேடும் பணிகள் இடைநிறுத்தம்.

0
90

திம்புளை – பத்தனை பொலிஸ் பகுதியில், 291 அடி நீளமான டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற்போன 19 வயது யுவதி இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (20.07.2021) இரண்டாவது நாளாகவும் கடற்படை சுழியோடிகள், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதும் யுவதியை கண்டுப் பிடிக்க முடியவில்லை.

தனது நான்கு நண்பிகளுடன் கடந்த 18 ஆம் திகதி டெவோன் நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற போது குறித்த யுவதி கால் தடுமாறி வீழ்ச்சியில் விழுந்தார்.

தலவாக்கலை லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் வசித்த 19 வயதான எம்.பவிர்ரா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் நேற்றும் (19) முன்னெடுக்கப்பட்ட நிலையில் அந்த பணிகள் இடை நடுவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நீர் வீழ்ச்சியின் அடிவாரத்தில் சுழியோடிகள் சகிதம் இன்று முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையும் பலனின்றி முடிந்துள்ளது.

இதேவேளை நாளைய (21) தினமும் யுவதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here