இசாலினிக்கு எதிராக டயகம தோட்ட மூன்றாம் பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டம்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதூர்தீன் அவர்களின் வீட்டு வேலைக்கு சென்று மிகவும் மர்மான முறையில் உயிரிழந்த இசாலினிக்கு நீதி கோரி டயகம மூன்றாம் பிரிவு தோட்ட மக்கள் கறுப்பு பட்டி அணிந்து கவனயீரப்பு ஊர்வலத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
குறித்த தோட்ட மக்கள் மலையக பெண்களை தலைநகரில் இழிவுப்படுத்தாதே, சிறுவர்களை வேலைக்கமர்த்தாதிருக்க உறுதி செய்வோம்.சிறுவர் ஊழியத்தை ஒழிப்போம். போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவாறு அனுப்பாதே அனுப்பாதே கொழுப்புக்கு அனுப்பாதே,வேண்டும் வேண்டும் இசாலினிக்கு நீதி வேண்டும் என கோசமிட்டு தோட்டத்திலிருந்து டயகம நகர் வரை வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆரம்பத்தில் சுகாதார பொறிமுறைகளுக்கமை நடைபெற்ற இந்த ஆர்பாட்டம் நடைபெற்ற போதிலுத் இறுதியில் அதனை பின்பற்றுவது காணக்கிடைக்கவில்லை
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டத்தொழிலாளர்கள் அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புக்கள்,வர்த்தகர்கள் விவசாயிகள் என சுமார் 300 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தோடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்
மலையகம் பெண்கள் என்றால் இந்த நாட்டில் அடிமை சமூகமாகவே பார்க்கப்படுகிறது இவர்களுக்கு ஒரு நீதி ஏனையவர்களுக்கு ஒரு நீதி இணையத்தளத்தில் ஆபாச படத்தினை வெளியிட்டதற்காக 30 மேற்பட்டவர்களை கைது செய்துள்ளார்கள். ஆனால் இந்து சிறுமி எவ்வாறு இறந்தார் என்பது இன்னமும் மர்மாகவே உள்ளது.பாராள மன்றத்தில் சட்டமியற்றும் ஒருவராக இருந்து கொண்டு இந்த குற்றம் எவ்வாறு இடம்பெற்றது இந்த நாட்டில் பணக்காரர்களுக்கு ஒரு நீதி ஏழைகளுக்கு ஒரு நீதியா?குற்றம் இளைத்தவர் எவர் என்றாலும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் அவ்வளவு பெரிய பணக்கார அமைச்சர் வீட்டில் எவ்வாறு மண்ணெண்ணை வந்தது நுளம்பு சுரூல் எவ்வறு வந்தது.

என்பதனை சட்டத்துறை வெளிப்படுத்த வேண்டும்.மலையகத்திலிருந்து இவ்வாறு உயிரிழந்த சிறுமி இவராக இருக்க வேண்டும் இனிவரும் காலங்களில் எந்த ஒரு சிறிமையும் வேலைக்க அனுப்பக்கூடாது எனப்பதனை இந்த மலையக மக்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் அத்தோடு இன்று உயிரிழந்த இசாலினி நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் குற்றவாளிக்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க விட்டால் போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.
குறித்த ஆர்;ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலங்கள் இடம்பெற்ற பின் ஆர்ப்பாட்ட காரர்கள் களைந்து சென்றனர்.

 

கே.சுந்தரலிங்கம், க. கிஸாந்தன்