ஷிஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும்”தொழிலாளர் தேசிய சங்கத்தின் போராட்டம்.

“ஷிஷாலினியின் மரணத்திற்குநீதி வேண்டும்” எனக் கோரி தொழிலாளர் தேசிய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணிக்கு ஹட்டன் நகரில் இடம்பெறவுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.