உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் கொரோனாவுக்கு மத்தியில் ஹஜ் பெருநாளினை மிக எளிமையாக கொண்டாடி வருகின்றனர்.

உலகை உலுக்கிவரும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் மிகவும் எளிமையான முறையில் ஹஜ் பெருநாளினை இன்று (21) கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஹஜ் பெருநாளினை முன்னிட்டு மலையக இஸ்லாமிய பள்ளிவாசல்களில் ஏனைய நாட்களை விட இன்று (21) சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சமூக இடைவெளி பேணி சமய வழிபாடுகள் மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றன.

ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் பெருநாள் தொழிகை மௌலவி சாஜகான் தலைமையில் நடைபெற்றது.இதன் போது மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலோனோர் மாத்திரம் சமூக இடைவெளி பேணி கலந்து கொண்டு தொழுகையில் ஈடுப்பட்டனர்.

இந்த பெருநாள் தொழுகையின் எமது நாடு பீடிக்கப்பட்டுள்ள கோரோனா தொற்று மிக விரைவில் நீங்கி நாட்டு மக்கள் வழமையான நிலையினை அடைய வேண்டும் என பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

இந்த தொழுகையினை நெறிப்படுத்துவதற்காகவும் சுகாதார வழிமுறைகளை பேணுவதற்காகவும் பள்ளி நிர்வாகம் விசேட குழு ஒன்றினையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கே.சுந்தரலிங்கம்.