இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு.

இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உபாதை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டிருந்த சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டொக்ஸ் மற்றும் விக்கெட் காப்பாளர் ஜொனி பெயர்ஸ்டோவ் ஆகியோர் மீள அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதன்படி, ஜோ ரூட்(கேப்டன்), ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஜானி பேர்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் கிராலே, சாம் கரன், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஒலே போப், ஒலே ராபின்ஸன், டாம் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், மார்க் உட்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஆக்ஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.