அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு – கோட்டையில் கடும் வாகன நெரிசல்.

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு – கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோட்டை தொடருந்து நிலையத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி தற்போது லோட்டஸ் வீதியை நோக்கி பயணிப்பதாலக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஒல்கொட் மாவத்தை உள்ளிட்ட வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.