ஒரேநாளில் இரண்டு மொடர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை

கண்டியில் பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய இதனை தெரிவித்தார்.

பேராதனை – ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளச் சென்றபோது, தற்செயலாக அவருக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அவர் மயக்கமடைந்ததுடன், பல உபாதைகளுக்கும் உள்ளான நிலையில். அவர் பேரதெனிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தடுப்பூசி மையத்தில் தனக்கு இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் அவரது கணவர் இந்த விடயம் குறித்து பேரதெனிய மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடளித்துள்ளார்.

இதற்கமைய, இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் நிஹால் வீரசூரியா தெரிவித்தார்.