மனிதம் மரணித்து விட்டதா? லிப்பகலை தோட்ட மக்கள் கேள்வியெழுப்பி ஹிசாலினிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்.

மனிதம் மரணித்துவிட்டா? என கேள்வி எழுப்பி டயகம சிறுமி ஹிசாலினிக்கு நீதி வேண்டும் என கோரி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிப்பகலை தோட்ட மக்கள் இன்று (22) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டயகம மூன்றாம் பிரிவைச்சேர்ந்த ஜூட்குமார் ஹிசாலினி வயது 16 கடந்த 15 திகதி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதுர்தீன் வீட்டில் வேலைக்கு சென்றிருந்த நிலையில் எறிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டு கடந்த 15 ம் திகதி மரணம் அடைந்தார்.

இந்த மரணத்தில் பல மர்மங்கள் மறைந்து காணப்படுவதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இன்றைய தினம் சிறுமி ஹிசாலினிக்கு நீதி கோரி லிந்துலை லிப்பகலை தோட்ட மக்கள் கொழுந்து மடுவத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்பாட்டக்கார்கள் பதாதைகளை ஏற்திய வண்ணம்.’இடைத்தரகர்களே எங்கள் பிள்ளைகளை கயவர்களுக்கு விற்பதை நிறுத்து’,காமுகர்களை கைது செய்,’காமுகர்களை சட்டத்தின் முன் நிறுத்து,’கயவர்களே ஏன் இந்த உடற்பசி மனிதம் மரணித்து விட்டதா? போன்ற பதாதைகளை காட்சி படுத்தி கோசமிட்டனர்.
ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்பு,அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியனவற்றின் பொதுச் செயலாளர் அம்மாசி நல்லுசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் லிப்பக்;கலை,அமிர்தகங்கை.என்போல்ட், தோட்டத்தொழிலாளர்கள் அகில இலங்கை தொழிறசங்க காங்கிரஸ்ஸின் தேசிய அமைப்பாளர் தங்கராஜா ராஜ்குமார்,பிரதி பொதுச் செயலாளர் ஜெயகுமார்,விக்ணேஸ்வரன்,பொருளாளர்.கந்தசாமி லோகேஸ்வரி,இளைஞர் அணி தலைவர் கணேசன் உட்பட தொழிற்சங்க உறுப்பினர்கள்,இளைஞர்கள் பொது அமைப்புக்கள் உள்ளிட்ட சுமார் 100 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

கேசுந்தரலிங்கம்