மரம் ஏறி கல்வி கற்ற தோட்ட மாணவர்களுக்கு மாற்றுத் திறன் வகுப்புகள்.

0
222

ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் தோட்டப் பகுதியில் உள்ள மிகவும் கஷ்டமான பிரதேசத்திலேயே அமைந்துள்ளன. இந்தப் பிரதேசங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பெருவாரியான பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் கிடையாது இவ்வாறான சூழ்நிலையில் இணையம் மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் போது மாணவர்கள் மரங்கள் மீதும் மலைகள் மீதும் ஏறியே கல்வி செயப்பாடுகளை மேற்கொண்டனர் இதனை நிவர்த்தி செய்யும் முகமாக தோட்ட மாணவர்களுக்கு தற்போது அதி நவீன திறன் வகுப்புகள் ஏற்படுத்தி நவீன உலகத்தோடு ஒன்றிணைக்கும் செயற்பாட்டினை ஹட்டன் கல்வி வலயம் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிக அதிகஸ்ட்ட பிரதேசமான ஹட்டன் கல்வி வலயத்தில் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் திறன் வகுப்பு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த புதிய நவீன திறன் வகுப்பின் மூலம் கர்கஸ்வோல்ட், முதலாம் பிரிவு, இரண்டாம் பிரிவு , பொனகோட், ரொப்கில், பிங்போனி, இன்ஜஸ்ரி உள்ளிட்ட கஸ்ட்ட பிரதேசங்களில் இணைய வசதி பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்கள் பயனடைய உள்ளனர்.

குறித்த நவீன திறன் வகுப்பறை அமைப்பதற்கு மஸ்கெலியா சர்வதேச சுகாதார மற்றும் வைத்திய நிலையம் மற்றும் ரத்னம் பவுன்டேசன் ஆகியன அனுசரனையினை வழங்கியுள்ளன. சுகாதார பொறிமுறைகளுக்கு அமைவாக பாடசாலையின் அதிபர் கேசவலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் மஸ்கெலியா ஐ.எம்.எச்.ஓ. செயத்திட்ட பணிப்பாளர் கந்தையா விக்ணேஸ்வரன் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன்…..

நாம் ஒரு காலத்தில் மணலிலும் கரும்பலகையிலும் தான் கல்வி கற்று ஆசிரியர் சேவைக்கு வந்திருக்கின்றோம் ஆனால் இன்று அவ்வாறு அல்ல அதி நவீன தொழிநுட்பங்கள் கற்றல் கற்பித்தல் செயப்பாடுகளில் வந்துள்ளன ஆகவே நவீன உலகத்தோடு மாணவர்களை இணைப்பதற்கு ஆசிரியர்கள் முதலில் கற்க வேண்டும் அப்போது தான் நாம் மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும்.

உங்களுக்கு தெரியும் எமது கல்வி வலயத்தில் அதிகமான பாடசாலைகள் கஸ்ட்டமான பாடசாலைகள் இந்த பாடசாலைகளில் கல்வி பெரும் பெரும்பாலான மாணவர்களுக்கு இணைய வழி கல்வியினை பெற முடியாது அந்த மாணவர்களுக்காக இன்று கல்வி அமைச்சு பல லட்சம் ரூபா செலவில் இணைய வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது மரங்களிலும் மலைகளிலும் ஏறி கற்றலில் ஈடுபட்ட எமது மாணவர்களுக்கு இன்று அதி நவீன தொழிநுட்பத்தில் திறன்பலகை வகுப்பறைகள் மூலம் கற்க கூடிய வாய்ப்பு எமக்கு கிட்டியுள்ளது இதனை எமது ஆசிரியர்கள் பயன்படுத்தி எதிர்கால மாணவர்களில் வாழ்க்கையினை மேம்படுத்த உதவ வேண்டும்.

அத்தோடு ஆசிரியர்களும் கற்றுக்கொண்டு இந்த பிரதேசத்தில் இணைய வசதிகள் பெற முடியாத அனைத்து மாணவர்களுக்கு உதவ வேண்டும். அதற்காக தான் இன்று இப்பாடசாலையில் இணைத்தின் ஊடாக கற்கக்கூடிய வகுப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் உங்களுக்கு தெரியும் மத்திய மாகாணத்தில் நாம் கல்வி தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டோம் அதற்கு ஆசிரியர் அதிபர்களின் அர்பணிப்பு தான் காரணம் ஆகவே தான் பல்வேறு பட்ட திட்டங்களின் ஊடாக நாம் கஸ்ட்ட பாடசாலைகளில் இவ்வாறு திறன் வகுப்புக்களையும் பாடசாலைக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். நாம் இருக்கும் நிலையிலிருந்து மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கு நாம் உங்களிடம் எதிர்ப்பார்பது மாணவர்களின் அடைவு மட்டம் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here