சிறுமியை சித்திரவதை செய்த தந்தை மற்றும் மாமியார் அதிரடி கைது!

0
176

நுரைச்சோலைப் பகுதியில் வீடொன்றில் சித்திரவதைக்கு ஆளாகியிருந்த 13 வயதான சிறுமி ஒருவர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சிறுமியை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் அச்சிறுமியின் தந்தை மற்றும் மாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தண்டனை சட்டக் கோவையின் 308 (ஆ) பிரிவுக்கமைய சிறுவர்களை வன்கொடுமைக்கு உட்படுத்துவது குற்றமாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here