மலையக சிறார்கள் கூலி வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுப்பதற்கும், அவர்களுக்கான கல்வி உரிமையை உறுதிப்படுத்தி வளமானதொரு எதிர்காலத்துக்கு அடித்தளமிடுவதற்கான தேசிய பொறிமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் இன்று கண்டியில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பேராசிரியர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.