மலையகத்தில் பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு என்ன நடந்தருக்கின்றது என்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சும் மாகாண கல்வி அமைச்சும் பொலிசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் நேற்று (26.07.2021) நுவரெலியாவில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்……
இன்று மலையகத்தில் இடைவிலகுகின்ற மாணவர்கள் தொடர்பாக எந்தவிதமான தகவல்களும் இல்லை.அவ்வாறான அநேகமானவர்களே வீட்டு வேலைக்காக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.எனவே இந்த இடைவிலகல் தொடர்பாக கல்வி அமைச்சு மாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்கள் பொலிசார் கிராம உத்தியோகஸ்தர்கள் சமுர்த்தி அதிகாரிகள் ஊடாக தகவல்களை பெற்றுக் கொண்டு அவர்களின் நிலைமை தொடர்பாக ஆராய வேண்டிய ஒரு நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
டி.சந்ரு