வானொலி ஊடகவியல்’ பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

0
201

ஊவா வானொலியின் தொடர்பாடல் கல்வி மையத்தினால் நடாத்தப்பட்ட ‘வானொலி ஊடகவியல்’ தொடர்பான நான்காவது பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (27-07-2021) ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் ஊவா வானொலி வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது தமிழ் மற்றும் சிங்கள மொழியில் மூன்று மாதகால பயிற்சி நெறியை நிறைவு செய்த 72 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்தன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சுரேஷ் ராஜரத்னம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here