தீய பார்வை தனது நிலத்தின் மீது படாமல் இருக்க சன்னிலியோனின் பேனரை வைத்து விவசாயி

சன்னிலியோனின் பேனரை வைத்து விவசாயி ஒருவர் செய்த காரியம் பலரையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கினபல்லி சென்சு ரெட்டி என்ற விவசாயி தனது 10 ஏக்கர் நிலத்தில் முட்டைகோஸ், காளிஃபிளவர், மிளகாய் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளார். நன்கு செழித்து வளரும் இவர்களின் பயிர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனால் கண் திருஷ்டி படுவதாக நினைத்த அங்கினபல்லி, அந்த கிராமத்தினர் மற்றும் தனது விவசாய நிலம் வழியாக கடந்து செல்பவர்களின் தீய பார்வை தனது நிலத்தின் மீது படாமல் இருக்க வித்தியாசமாக ஐடியா ஒன்றை யோசித்தார். தனது நிலத்தை சுற்றி பல இடங்களில் நடிகை சன்னி லியோனின் ஆள் உயர போஸ்டரை தான் வைத்துள்ளார்.

அதுவும் சன்னி லியோனின் பிகினி ஃபோட்டோவை வைத்துள்ளார். இப்போது இவரின் நிலத்தை கடந்து செல்பவர்களின் பார்வை நிலத்தை பார்ப்பதற்கு பதிலாக சன்னி லியோன் மீது படுகிறது. இந்த சம்பவம் தான் தற்போது ஆந்திராவில் பேசு பொருளாக மாறியுள்ளது.