சீனாவில் மீண்டும் தீவிரமாக பரவும் கொவிட் தொற்று.

சீனாவில் கொவிட் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ ஆரம்பித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அந்த நாட்டின் நான்ஜிங் நகரில் கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அங்கிருந்து தற்போது மேலும் 5 மாகாணங்களுக்கு கொவிட் பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி அங்குள்ள விமான நிலையத்தில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரையில் 200க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது ‘மிக ஆபத்தானது’ என்று கூறப்படுகிறது.

நான்ஜிங் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.