வாழ்வாதாரத்தினை இழந்த 240 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

0
219

கொரோனா தொற்றுப்பரவல் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கும் சட்டம் காரணமாக நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட மலையகப்பகுதிகளில் பலர் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து மிகவும் துன்பப்படும் நிலையில் உள்ளதாக தெரிவுசெய்யப்பட்ட 240 குடும்பங்களுக்கு அரசி சீனி, சோயாமீட், பருப்பு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் மற்றும் முகக்கவசம் ஆகியன கனடா தமிழ்க் கலை பண்பாட்டுக்கழகம் வோட்டர்லூ வட்டாரம் இன்று (01) திகதி நானுஓயா எடிம்ரோ மற்றும் மட்டுக்கலை ஆகிய தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டன.

மலையகத்தில் இன்று அன்றாடம் கூலித்தொழிலில் ஈடுபடும் பலநூறு குடும்பங்கள் காணப்படுகின்றன. குறித்த குடும்பங்களில் ஐந்து ஆறு அங்கத்தவர்கள் காணப்படுகின்ற போதிலும் ஒருவரின் உழைப்பிலேயே பெரும்பாலான குடும்பங்கள் தங்கியுள்ளன.

இந்நிலையில் அவர்களும் கொவிட் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக தொழிலின்றி இருப்பதனால் சாப்பிடுவதற்கு கூட பல குடும்பங்கள் இடர்படுகின்றன. ஒரு சில குடும்பங்களுக்கு அரசாங்கம் சமூர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள போதிலும் அதிகமானவர்கள் இந்த நிவாரணமும் கிடைப்பதில்லை அவ்வாறான குடும்பங்களுக்கும், விசேட தேவையுடையோர் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எவர் உதவியுமின்றி தனித்து வாழும் குடும்பங்களை தெரிவு செய்து குறித்த நிவாரணப்பொதி வழங்கப்பட்டன.

இதன் போது நிவாரண உதவிகளை வந்து பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுக்கப்பட்டன.

குறித்த நிவாரண வேலைத்திட்டம் டயகம, மஸ்கெலியா, பதுளை, கிலாசோ அக்கரபத்தனை, கித்துல்கல உள்ளிட்ட பல பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யு.எஸ்டி.எப் நிறுவனத்தின் தலைவர் முரளிதரன் தெரிவித்தார்.

இது குறித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

மலையகத்தில் இன்று பலர் குடும்பங்கள் கொவிட் தொற்று காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர். அதில் முக்கியமாக அன்றாடம் தொழில் செய்தவர்கள் காணப்படுகின்றனர். விசேட தேவையுடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள். 60 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் பராமறிப்பற்ற குடும்பங்கள், கனடா தமிழ்க் கலை பண்பாட்டுக்கழகம் வோட்டர்லூ வட்டாரம் நிதி அனுசரனையில் வழங்கி வருகிறோம். அவர்களுக்கு இந்த வேளையில் நன்றியினை தெரிவித்துவருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here