தற்போதைய ஊரடங்கால் ஏற்படவுள்ள ஆபத்து!

0
154

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள இறுக்கமற்ற ஊரடங்கு நடைமுறையால் எதிர்வரும் வாரங்களில் நாளொன்றுக்கு 10,000 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர், மருததுவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதன்படி ,தற்போதைய நடைமுறைகளால் மாதம் ஒன்றுக்கு 10,000 கொரோனா மரணங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவித்த வாசன் ரட்ணசிங்கம், தெற்காசியாவில் இலங்கை மரண வீதத்தில் முன்னிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை எச்சரிக்கை நிலை நான்கில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எச்சரிக்கை நிலை நான்கு என்பது முழு இலங்கையும் சிவப்பு வலயமாகியுள்ளது என்று கூறிய வாசன் ரட்ணசிங்கம், தொற்று சமூகப் பரவலை அடைந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும் ,அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும், ஆனால் இப்போது அத்தியாவசியத் தேவை என்ற பெயரில் அனைவரும் நடமாடிக் கொணடிருக்கிறார்கள் என்று கூறிய அவர், இந்த முடக்கத்தால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here