பெருந்தோட்ட பகுதிகளில் ஊரடங்கு காலப்பகுதியில் வறுமானத்தை இழந்த மற்றும் வறுமைகோட்டின் கீழ் வாழும் 5000 குடும்பங்களை தெரிவு செய்து 2000 பெருமதியான உணவு பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் பெருந்தோட்ட பகுதி உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களூடாக வறுமைகோட்டின் கீழ் வாழும் குடும்பங்களை தெரிவு செய்து இவ்வுணவு பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்