ஜீவன் தொண்டமான் மற்றும் M.K.ஸ்டாலினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

0
164

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், தமிழக முதலமைச்சர் M.K.ஸ்டாலினுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அதன்படி ,இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சரை நேற்று (01) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செரிந்து வாழும் மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்ட நாள் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் மலையகத்திற்கான தனியான பல்கலைகழகம் அமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளமையை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்துடன் , மலையகத்தில் அமையவுள்ள பல்கலைகழகத்திற்கும்,
தமிழ்நாட்டின் அரசாங்கத்திற்கும் உறவை வளர்த்துக்கொள்வது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here