கொவிட் தொற்றால் ஊடகவியலாளரும் சமூக நலன் சார்ந்தவருமான ஞானபிரகாஷ் பிரகாஷ் திடிரென உயிரிழந்தமை சமூகத்தின் பேரிழப்பு என இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
முகநூலில் செய்திகளை மிக வேகமாகமும் துல்லியமாகவும் வழங்கி கொண்டிருந்தவர்.இவரின் செய்திக்கென பலரும் இவரின் முகநூலை பின் தொடர்ந்தனர்.மற்றும் அச்சு ஊடகத்துறையூடாகவும் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற இளம் ஊடகவியலாளர். அதுமட்டுமல்லாமல் சமூகத்தின் நீதிக்காக குரல் எழுப்பும் சமூக போராளியான இளம் ஊடகவியலாளர் ஞானபிரகாஷ் பிரகாஷ் இழப்பு தமிழ்பேசும் சமூகம் உட்பட முழு இலங்கைக்கும் பேரிழப்பு .என தன் இரங்கல் செய்தியில் இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.