நாடு முடக்கப்பட்டதால் நாளொன்றுக்கு அரசுக்கு இத்தனை கோடி இழப்பா?

0
168

எதிர்வரும் 13ஆம் திகதியுடன் நாட்டை முழுமையாக திறக்க வேண்டுமென்பதே தனது தனிப்பட்ட கருத்தாகும் என இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்

நாடு இப்போது திறந்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம், எதிர்வரும் நாட்களில் நாடு திறக்கப்படாவிட்டார் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். நாட்டிலுள்ள 45 இலட்சமான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நாடு முடக்கப்படுமானால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்” என்றார்.

மேலும் நாடு மூடப்பட்டதன் காரணமாக நாளொன்றுக்கு 15 பில்லியன் ரூபாவை அரசு இழந்து வருகிறது. எனவே 10 நாட்கள் மூடப்படும் போது சுமார் 150 பில்லியன் ரூபாவை இழப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here