நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்களை விநியோகிக்க நுவரெலியா பிரதேச சபை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டம் 06/09/2021 தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் நடைபெற்றது.இதன் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆயுர்வேத மருந்து பொருட்கள் தேவையானவர்கள் நுவரெலியா பிரதேச சபை காரியாலயத்திலும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை செய்வதோடு அதேபோல குறித்த பகுதி பிரதேச சபை உறுப்பினர்களின் ஊடாகவும் ஆயுர்வேத மருந்து பொருட்களை வழங்க நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலுயோகராஜ் முடிவெடுத்துள்ளார். இத்தீர்மானத்துக்கு சபை உறுப்பினர்களும் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்