கொட்டகலை மற்றும் பத்தனை பகுதிகளில் மிக விரைவாக பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுமென கொட்டகலை பிரதேச சபையின் உபத்தலைவர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஊடாக கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் முழுமையான பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது பல அபிவிருத்தி பணிகள் இடைநடுவிலேயே கைவிடப்பட்டுள்ளது. எனவே அவ்வேலைத்திட்டங்கள் விரைவாக முழுமைப்படுத்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இந்திய அரசியல் பிரமுகர்களின் சந்திப்பின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் மலையகத்தை நோக்கி வர இருக்கின்றன.அவ்வேலைத்திட்டங்கள் கொட்டகலை-பத்தனை பகுதியையும் வந்தடையும் எனவே விரைவில் பாரிய அபிவிருத்தி திட்டங்களும்,நல்லாட்சி அரசாங்கத்தில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படுமெனவும் கொட்டகலை பிரதேச சபை தலைவர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்