முழு ஆப்கானிஸ்தானும் தலிபான் கட்டுப்பாட்டில். பஞ்ச்ஷிரும் கைப்பற்றப்பட்டது.

சில எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும் ஏனையவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் முஜாஹித் அறிக்கையில் தெரிவித்துள்ளதுடன், தங்களை ஒடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் பஞ்ச்ஷிர் மக்களுக்கு உறுதியும் அளித்துள்ளதாக கூறினார்.

ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிய போதும் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்து வந்தது.

ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தலீபான்களுடன் சண்டையிட்டு வந்தனர்.

தாலிபான் மாகாணத்தை கைவிட்டால் சண்டையை நிறுத்தவும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக எதிர்ப்புக் குழுவின் தலைவர் மசூத் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.

இந் நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.