ஹட்டனில் பொலிஸார் தீவிர சோதனை!

0
208

ஹட்டன் பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த பல இடங்களில் ஹட்டன் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
ஹட்டன் பகுதிக்கு உள் நுழையும் மற்றும் வெளி செல்லும் வாகனங்களை பிரதான வீதியில் பல இடங்களிலும் குறுக்கு வீதியிலும் பல இடங்களில் வீதி தடைகளை ஏற்படுத்தி இன்று காலை முதல் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இதன் போது ஹட்டன் மல்லியைப்பூ சந்தி,ஹட்டன் நகரத்தில் பல இடங்களிலும் ஹட்டன் டிக்கோயா விதி டிக்கோயா போடைஸ் வீதி,எம் ஆர்.டவுன்,பண்டாரநாக்கு சந்தி ,பட்டல்கலை சந்தி உள்ளிட்ட பிரதான இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றன.

அத்தியசிய தேவைக்காகவன்றி பல வாகனங்கள் ஏதோ ஒரு காரணங்களை காட்டி செல்வதற்கு முற்படுவதனை பொலிஸார் கண்டு கொண்டதனையடுத்து அவ்வாறு பயணம் செய்த பல வாகனங்கள் கடும் எச்சரிக்கைக்கு பின் திருப்பி அனுப்பினர்.

இதே நேரம் ஹட்டன் நகர் பகுதியில் சாலை ஓரங்களில் வாகனங்கள் தரிப்பதற்கு பொலிஸார் இடமளிக்கவில்லை.

தொடந்து தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டத்தினை மீறினால் பொது மக்கள் மற்றும் சரதிகளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பொலிஸார் இதன் போது தெரிவித்தனர்.

 

கே.சுந்தரலிங்கம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here