இருபதுக்கு – 20 உலகக் கிண்ண இந்திய அணி. டோனியும் இனைப்பு.

0
90

இருபதுக்கு – 20 உலகக் கிண்ண தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழக வீரர்களான ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் இடம்பெறவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி :

விராட் கோலி (அணித் தலைவர் ), ரோஹித் சர்மா (துணைத் தலைவர் ), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் காப்பாளர்), இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

மாற்று வீரர்கள் : ஷ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர், தீபக் சஹார்

இதேவேளை, எவரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு – 20 உலகக்கிண்ணத்தை வென்றது.

இந்நிலையில், மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டமை அந்த அணிக்கு மிகப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here