மவுண்ட்ஜின் தோட்டத்தில் சிவனேஷனுக்கு மாணிக்கல் கிடைத்திருக்க வேண்டும். சச்சுதானந்தன் பரபரப்பு தகவல்.

வட்டவளை மவுட்ஜின் தோட்டத்தில் அரசாங்கம் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாற்பண்ணைகளை உருவாக்க அமைச்சரவை அந்தஸ்து கிடைத்துள்ளது. இந்நிலையில் குறித்த தோட்டத்தில் விலைமதிப்பற்ற மாணிக்ககல் இருப்பதாக கூறி வரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் பா.சிவனேசனுக்கு இவ்விடயம் எப்படி தெரியுமென இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் மாணிக்க கல் செறிந்து கிடக்கும் மவுண்ட்ஜின் தோட்டத்தில் மாணிக்கல் இருப்பதாகவும் அதை விற்கும் நோக்கிலேயே அரசாங்கம் குறித்த பகுதியை குறிவைத்து அபகரிக்க நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ள சிவனேசனுக்கு அங்கு மாணிக்க கல் இருப்பதாக எவ்வாறு தெரியும். ஒருவேளை மாணிக்கல் இருக்குமென்பதை இவர் உறுதி செய்து கூறுகிறாரென்றால் இவர் ஏற்கனவே அவ்விடத்தில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது விலைமதிப்பற்ற மாணிக்கல் சிவனேசனுக்கு கிடைத்திருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொகவந்தலாவ பகுதியில் இன்றும் பல பகுதிகளில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. அதற்கு அங்கு காணப்படும் குழிகளிலே காரணம்.இவ்வாறு சட்ட விரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடும் நபர்களுக்கு பின்புறத்தில் நின்று கைக்கொடுப்பதே சிவனேசன் என்பது பலருக்கும் தெரியும்.

அதுமட்டுமல்லாமல் பால் உற்பத்தி பண்ணைகளை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.ஆனால் சிவனேஷன் இ.தொ.காவை விமர்சனம் பண்ணினால் மாத்திரமே எதிர்கால அரசியல் உண்டென நம்பி இ.தொ.காவை குற்றம் சுமத்தி வருகின்றது.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது மாணிக்கல் அகழ்வு தொடர்பில் தொ.தே.ச தலைவர் திகாம்பரம் மீது வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு காணப்படுவதை மறந்துவிட்டு சிவனேஷன் அறிக்கைகளை விட்டு வருகின்றார்.

மக்களுக்கு நன்மையூட்டும் விடயங்களை மாத்திரமே இ.தொ.கா கொண்டு வரும். ஆனால் சில பொய் வதந்திகளையும் உண்மையற்ற விமர்சனைகளையும் முன்வைத்து மக்களை திசைத்திருப்ப பார்க்கும் இவ்வாறான தரகர்களை மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டுமென இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.