பெரெண்டினா நிறுவனத்தின் ஊடாக கொரோனா விழிப்புணர்வு வேலைத்திட்டம்.

பெரெண்டினா நிறுவனத்தின் ஊடாக கொரோனா விழிப்புணர்வூ வேலைத்திட்டம் நுவரெலியா மாவட்ட தோட்டப்பகுதிகள் தோறும் கட்டங்கட்டமாக நடாத்தப்பட்டு வருகின்றன..அதில் ஒருகட்டமாக நானூஓயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானூஓயா தோட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு வேலைத்திட்டம் நானுஓயா பொலிஸ் உதவியுடன் பெரெண்டினா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது தோட்டப்பகுகளில் கொரோனா பரவும் விதம் மற்றும் கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான சுகாதார விதிமுறைகள் உட்பட அனைத்தும் ஒலிபெருக்கி ஊடாக பெரெண்டினா நிறுவன கள உத்தியோகத்தர்கள் ஊடாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்