உள்ளாடை முதல் இறக்குமதி செய்தமை குறித்து அனைவரும் வெட்கப்பட வேண்டும்

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகள் இல்லை என எவரும் உயிரிழந்துவிட மாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் மரணிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் உள்ளாடை முதல் இறக்குமதி செய்தமை குறித்து அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்றும் உள்ளாடைகளை அணியாமல் இருப்பது இதனை விட நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.