கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன் மர்மமான முறையில் மாயம்.தேடும் பணி தீவிரம்.

கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொத்மலை பொலிஸ் நிலைய சார்ஜனாக கடைமையாற்றிய செல்லையா இளங்கோவன் என்பவரே மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.
கடந்த 8ம் திகதி சுகயீனம் காரணமாக கம்பளை வைத்தியசாலையில் குடும்பத்தாரால் தன் இருப்பிடமான பூண்டுலோயாவிலிருந்து காவு வண்டி ஊடாக அதிகாலை 5.30 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடிரென அனுமதிக்கப்பட்ட பொலிஸ் நிலைய சார்ஜனை காணவில்லையென வைத்தியசாலையிலிருந்து தகவல் கிடைக்க  குறித்த நபரை தேடும் பணியில் கம்பளை பொலிசாரும், பூண்டுலோயா பொலிசாரும் இருபக்கமும் தேடி வருகின்றனர்.
இது தொடர்பில் காணாமல் போன பொலிஸ் சார்ஜன் மகன் தெரிவிக்கையில் தன் தந்தைக்கு நெஞ்சு வலி காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதித்தோம். ஆனால் அவரை அனுமதித்த அன்று காணவில்லையென வைத்தியசாலையில் இருந்து அழைப்பு வந்தது. தன் தந்தை தப்பி செல்ல எவ்வித அவசியமும் கிடையாது. என்ன நடந்தது என இதுவரை தெரியவில்லை. காணாமால் போய் 7 நாட்களாகியும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. பல வகையிலும் தேடிக்கொண்டிருக்கின்றோம். எனவே பொதுமக்களும் எமக்கு உதவி செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்