சார்மல்ஸ் தோட்டத்தில் தனிமைப்படுத்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு.

கொட்டகலை மேபீல்ட் தோட்ட சார்மல்ஸ் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையைத் தொடர்ந்து முடக்கப்பட்ட தோட்டக் குடியிருப்பைச் சேர்ந்த குடும்பங்களுக்கு திகா-உதயா நிவாரணத் திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரின் தனிப்பட்ட நிதியின் ஊடாக இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
குறிப்பிட்ட தோட்டக் குடியிருப்பைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கான இந்த நிவாரண பொருட்களைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் அமைப்பாளர் ஜெஸ்டின் வழங்கி வைத்தார்.