கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை துடி துடிக்க கொன்ற மனைவி

இந்தியாவில் கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி எரிக்க, காதலன் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் Baddihalli-வில் வசித்து வரும் தம்பதி நாரயணப்பா(52)-அண்ணபூர்ணா(36). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நாரணயப்பா Nelamangala-வில் இருக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் எல்க்டிரிசியனாக வேலை செய்து வருகிறார்.

அண்ணபூர்ணா அங்கிருக்கும் வெங்காய மண்டியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அண்ணபூர்ணாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஓவியர் மற்றும் பணம் கொடுத்து உதவுபவருமான ராமகிருஷ்ணா(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஆகியதால், இதை அறிந்த நாரணயப்பா இது குறித்து மனைவியிடம் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று இது குறித்து நாரயணப்பா மற்றும் அண்ணபூர்ணாவிற்கும் இடையே வாக்குவாதம் கடுமையாக முற்றியதால், வீட்டில் இருந்த பெட்ரோலை நாரணப்பா மீது ஊற்றிய அண்ணபூர்ணா அவர் மீது தீயை கொளுத்தி போட்டுள்ளார்.

இதனால் தீயில் கருகி துடித்த அவர், அருகில் இருக்கும் வடிகால்வாயிலில் சென்ற விழ முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் காதலன் ராமகிருஷ்ணனும் அங்கு இருந்ததால், தண்ணீரில் விழுந்து எங்கு இவர் உயிர்பிழைத்துவிடுவார் என்று எண்ணி அவர் மீது கல்லைப் போட்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலே நாரயணப்பா துடி துடித்து இறந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், வீட்டில் இருந்த மூன்று மகள்களிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது 14 வயது மதிக்கத்தக்க மூத்த மகள் சாட்சியாக இருந்ததால், அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்