ஆபிரிக்க ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்.

பிரெஞ்சு படையினர் நடத்திய தாக்குதலில் ஆபிரிக்க ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அதான் அபு வலிட் அல் ஷராவி (Abu Walid Al-Sahrawi) கொல்லப்பட்டுள்ளார்.

இதனை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் தமது ட்விட்டர் பதிவின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐ.எஸ்.ஜி.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட போதும், மாலியில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பிரான்ஸ் தொடர்ந்து ஈடுபடும் என மெக்ரான் அறிவித்துள்ளார்.

மாலி, பர்கினோ பெசோ, நைஜர் ஆகிய நாடுகளில் இந்த பயங்கரவாத அமைப்பு செயற்பட்டுவரும் நிலையில், அதனை தடுப்பதற்கு குறித்த நாடுகளுக்கு, பிரான்ஸ் உதவி வருகிறது.

இதற்காக பிரெஞ்சு படைகள் மாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.