மான் வேட்டை நடத்தும் மலைப்பாம்பு : சிலிர்க்க வைக்கும் திக் திக் வீடியோ

ராட்சத மலைப்பாம்பு ஒன்று மான் ஒன்றினை விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வனப்பகுதியில், சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று மான் ஒன்றினை விழுங்குகின்றது.

வெறும் 34 நொடிகள் மட்டுமே இக்காட்சி காண்பவர்களைக் கதிகலங்க வைத்துள்ளது. குறித்த பாம்பு மானை முழுவதுமாக விழுங்கியதும் அங்கிருந்து சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ள நிலையில், வனத்துறை அதிகாரிகள் இதனை காணொளியாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.